திருமலைராயன் காசுகள்

முனைவர் மா.பவானி
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

திருமலைராயன் (15 ஆம் நூற்றாண்டு):
மு.பு:பன்றி உருவத்தின் மேல்புரம் குத்துவாள் சூரியன்
பி.பு: சாலவ திருமல ராஜ என்ற கன்னட வாசகம்

விஜயநகரப் பேரரசின் சோழ மண்டல மகாமண்டலேசுவர பிரதிநிதியாகத் திருமலைராஜன் காரைக்கால் மற்றும் தஞ்சை பிரதேசங்களை ஆட்சி செய்தார். இவன் தலைநகர் காவேரிக் கரையில் அமைந்திருக்கும். திருமலைராயன் பட்டினமாகும். தாஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் இவனது கல்வெட்டுகள் காணப்படுகின்றன (தஞ்சை) “சாலவதிருமலைராஜ்” என்ற பெயர் பொறித்த நாணயங்கள் இவரால் வெளியிடப்பட்டதாகக் கருதப்படுகிறது.