முக்கோணக்கருவி

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

முக்கோணக்கருவி நுண்கற்கருவிகளில் ஒரு வகையாகும். இதன் அமைப்பு முக்கோணம் போல் உள்ளதால் முக்கோணக்கருவி என்ற பெயரைப் பெற்றுள்ளது.

முக்கோணம் என்ற வடிவமைப்பைத் தொல்பழங்காலத்தில் மக்கள் கண்டுபிடித்தனர் என்பதற்கு இக்கருவி ஒரு நல்ல சான்றாகும்.

அமைப்பு

இதன் ஒரு பகுதியில் வெட்டும் முனை உள்ளது. இம்முனை கூராக, வெட்டுவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. மற்ற இரு பக்கங்களும் சற்றுத் தடித்து, பிடிகளில் பதித்துப் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன.

பயன்பாடு

இந்த தடித்த பக்கங்கள் மரப்பிடிகள் அல்லது எலும்புகளில் செருகப் (பதிக்கப்) பயன்படுத்தப்பட்டன. இதன் விளைவாக வெட்டும் முனையைக் கத்தி போலப் பயன்படுத்த முடியும். பல முக்கோணக்கருவிகள் ஒரு மரம் அல்லது எலும்பாலான கைப்பிடியில் பதித்து வைக்கப்பட்டு அறுவாள், கத்தி போன்ற கருவிகள் உருவக்கப்பட்டன.