வாழ்விடம் / ஊரிருக்கை

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

வாழ்விடம் என்பது மக்கள் வசிக்கும் இடமாகும். தொல்லியல் இடங்கள் வாழ்விடம், ஈமச்சின்ன இடம் எனப் பிரிக்கப்படுகின்றன.

வாழ்விடம்

வாழ்விடத்தில் தொல்லியல் மண்மேடுகள் காணப்படுகின்றன. இங்கு அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், பயன்பாட்டிற்குப் பிறகு எறியப்படுவதாலும், வீடுகள் கட்டப்பட்டு புனரமைப்பதாலும் மற்றும் பிற செயல்பாடுகளாலும் மண்மேடுகள் உருவாகின்றன. இவை 1 மீ முதல் 5 மீ வரை உயரத்துடன் காணப்படும். இங்கு மக்கள் பயன்படுத்திய பொருள்கள் காணப்படும். தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த இடங்களை அகழாய்வு செய்கின்றனர். இந்த இடங்கள் ஊரிருக்கைகள் என்றும் கூறப்படுகின்றன.

ஈமச்சின்ன இடம்

இந்த இடம் தற்போது சுடுகாடு, இடுகாடு என்று அழைக்கப்படுகின்றது. அக்காலத்தில் குறிப்பாகப் பெருங்கற்காலத்தில் (இரும்புக்காலம், வரலாற்றுத் துவக்கக் காலம்) இறந்தவர்கள் தனியான இடங்களில் புதைக்கப்பட்டனர். இந்த இடங்கள் வாழ்விடத்தின் மிக அருகிலேயோ அல்லது சில நூறு மீட்டர் முதல் சில கிலோமீட்டர்கள் தள்ளி அமைந்திருந்தன.

புதிய கற்காலத்தில் தென்னிந்தியாவில் இறந்தவர்கள் வீடுகளின் உள்ளேயோ வாழ்விடத்தின் அருகேயோ புதைக்கப்பட்டனர்.

ஈமச்சின்னங்களில் முழுமையான தொல்பொருள்கள் கிடைக்கும். வாழ்விடங்களில் பெரிதும் உடைந்த தொல்பொருள்களே காணப்படும்.