கல்வட்டம்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

கல்வட்டம் ஒரு பெருங்கற்கால ஈமச்சின்னம் ஆகும்.

இறந்தவர்களின் உடல் பகுதிகளை வைத்து அல்லது அவர்களின் நினைவாக எடுக்கப்படும் ஈமச்சின்னங்களின் மேற்பரப்பில். கற்பாறைகளைக் கொண்டு ஒரு வட்டம் உருவாக்கப்படுகிறது. இது தரையின் மேற்பரப்பில் காணப்படும். ஈமச்சின்னங்களைப் பாதுகாக்கும், அடையாளப்படுத்தும் அமைப்பாக இது திகழ்கிறது. இது அமைவதனால் பிற்காலத்தில் இறந்தவர்களைப் புதைப்பவர்கள், இதைத் தோண்டுவதில்லை.
கல்வட்டம், குப்பால் நத்தம், மதுரை மாவட்டம்

பெருங்கற்காலக் கல்வட்டங்களின் புதைந்த பகுதியில் தாழிகள், குழிகள், கற்பதுக்கைகள் போன்றவை காணப்படும். கற்திட்டையைச் சுற்றிலும் இத்தகைய கல்வட்டங்கள் காணப்படுகின்றன. மலைப்பகுதியில்/பாறையின் மேற்பரப்பில் இத்தகைய கல்வட்டங்கள் கற்திட்டைகள் வீழாமல் இருப்பதற்கு உதவியாக இருக்கின்றன.

சில இடங்களில், கரடுமுரடான கற்களால் கல் வட்டங்கள் செய்யப்படுகின்றன.
கல்வட்டம், செங்குளம்

இவற்றின் உள்ளே சிறு சிறு கற்கள் இட்டு நிரப்பப்படுகின்றன. சில இடங்களில் கற்பலகைகள் வட்டமாக புதைக்கப்படுகின்றன.

இவ்வாறு அமைந்த கல்வட்டங்களில், சில கற்கள் நெடுங்கற்களாக (Menhir) அமைவதும் உண்டு.

காணப்படும் இடங்கள்

இவை தமிழகத்தில், கற்கள் கிடைக்காத ஆற்றுப் படுகைகள் தவிர, பிற பகுதிகளில் ஆயிரக்கணக்காண எண்ணிக்கையில் காணப்படுகின்றன. சானூர், சித்தன்னவாசல் கொடுமணல் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
கல்வட்டம், ஆனைக்கரை, கேரளா

மேற்கோள் நூல்

Leshni,L.S 1974, South Indian Megalithic Burials, The Pandukal Complex. Wesbaden