பொது ஆண்டு - ஒரு ஆண்டு முறை

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப் பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

ஆண்டு முறை :

ஓர் ஆண்டு என்பது புவி சூரியனை ஒரு முறை சுற்றிவருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலமாகும். காலம் ஒருவரின் பிறப்பு அல்லது ஒரு நிகழ்வு அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றது. எ.கா. கிருத்துவ ஆண்டு, திருவள்ளுவர் ஆண்டு.

பொது ஆண்டு :

பொது ஆண்டு என்பது கிருஸ்த்துவ ஆண்டு முறையைக் குறிக்கும். இது கிருஸ்த்து பிறப்பிற்கு முன், கிருஸ்த்து பிறப்பிற்குப் பின் என்று இயேசு கிருஸ்த்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு வரையறை செய்யப்படுகின்றது. துவக்ககாலத்தில் கிருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்தியிருந்தாலும், தற்போது அனைத்துச் சமயத்தினரும் பயன்படுத்துவதால் பொது ஆண்டு என்று அழைக்கப்படுகின்றது.

கி.மு. = கிருஸ்த்து பிறப்பிற்கு முன் = Before Christ = BC
கி.பி. = கிருஸ்த்து பிறப்பிற்கு பின் = Anna Domini = AD
பொ.ஆ. = பொது ஆண்டு = Common Era = CE
பொ.ஆ.மு. = பொது ஆண்டுக்கு முன் = Before Common Era = BCE