விரால் அடிப்பான்

விரால் அடிப்பான் கடல் பருந்து இனத்தைச் சேர்ந்தது. விரால் மீன் என்றால் இதற்கு மிகவும் இஷ்டம். அதனால் நீருக்குள்ளேயே தென்படும் விரால் மீன்களைக் கவனமாகப் பார்த்துக் கொண்டே இருந்து நீருக்குள் சற்றே மூழ்கி விரால் மீனைக் கவ்விப் பிடித்து வேட்டையாடுவதால் இதற்கு இந்தப் பெயர் வந்தது.

60 செ.மீ.நீளப் பறவை. சிறகுகளை விரித்தால் 180 செ.மீ. நீளம் இருக்கும். எடை 2 கிலோ.

உடலின் மேல் பகுதி பழுப்பு நிறத்திலும் மற்றப் பகுதிகளில் சாம்பல் நிறத்திலும் இருக்கும். வயிற்றுப் பகுதி மட்டும் வெள்ளையாக இருக்கும். தலை முற்றிலும் சாம்பல் நிறம். கரு நிறக் கண்களைக் கொண்ட பறவை. கருப்பு நிற அலகு. கால்களும் வெள்ளை நிறமே..

அண்டார்டிகாவைத் தவிர உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும் பறவை. நீர் நிலைகளுக்கருகில் வசிக்கும். மரங்களில் மலையிடுக்குகளிலும் கூடு கட்டி வசிக்கும்.

ஒரு சமயத்தில் 2 முதல் 4 முட்டைகள் வரை இடும். ஐந்து வாரங்களில் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவரும்.