வரகு கோழி்

 

வரகு கோழி சற்றே பெரிய கோழியினப் பறவை. தலை, கழுத்து மற்றும் உடலின் கீழ்ப்பகுதிகள் கருப்பு நிறத்தில் காணப்படும். கழுத்திலிருந்து ஆரம்பித்து தலைக்குப்பின்னால் 4 அங்குல நீளத்துக்கு 3 ரிப்பன் போன்ற சிறகுகள் நீண்டு தொங்கிக் கொண்டிருப்பது பார்க்க அழகு. சிறகின் மற்றப் பகுதிகளில் வெண்மை நிறம் கலந்திருக்கும். பெண் பறவை ஆணைவிடச் சற்றே பெரிதாக இருக்கும். நீண்ட மெல்லிய மஞ்சள் நிறக் கால்களைக் கொண்டிருக்கும். அலகு சற்றே நீளமாகக் கூர்மையாக இருக்கும்.

இந்தியாவின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் அதிகமாக வாழும் பறவை. மழைக்காலங்களில் வேறு இடங்களுக்குக் குடிபெயர்வது உண்டு. பொதுவாக புற்கள் நிறைந்த பகுதிகளில் வசிக்கும். சமயங்களில் பருத்திக்காடுகளிலும் காணப்படும். தானியங்களையும் சிறு பூச்சிகளையும் உணவாகக் கொள்ளும். மற்ற கோழிகளை விட வேகமாகப் பறக்கும். பறக்கும்போது வாத்து பறப்பது போல இருக்கும்.

ஒரு சமயத்தில் 3 முதல் 4 முட்டைகள் வரை இடும். 21 நாட்களில் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவரும்.