நீளவால் இலை கோழி்

 

நீளவால் கோழிக்கும் மற்ற கோழிகளுக்குமுள்ள முக்கிய வித்தியாசம் இதன் பெரிய கால்களும் கால் விரல்களும்தான். இதனால் இந்தப் பறவையால் நீர்நிலைகளில் மிதக்கும் தாவர இலைகளின் மேல்கூட நடந்து செல்ல முடியும். இதற்கு நன்றாக நீச்சலடிக்கவும் தெரியும். நீண்ட வாலைக் கொண்டிருப்பதால் இந்தப் பெயர். ஆணைவிட பெண் பறவைகள் பார்ப்பதற்கு மிகவும் வண்ணமயமாகவும் அழகாகவும் இருக்கும்.

இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தோனேஷியாவில் அதிகம் இப் பறவையைப் பார்க்கலாம். தைவானிலும் ஆஸ்திரேலியாவிலும் சில காலங்களில் மட்டும் இவற்றைப் பார்க்கலாம்.

39 முதல் 58 செ.மீ. நீளம் வரை இருக்கும். வால் மட்டும் 25 செ.மீ. நீளம் இருக்கும். எடை 250 கிராம் வரை இருக்கும்.

முழுவதும் கருப்பாக, வெள்ளைச் சிறகுகளுடன் இருக்கும். கழுத்தின் பின்பகுதி தங்க நிறத்தில் ஜொலிக்கும். கண்ணைச் சுற்றி பளீரென்று வெண்மை நிறம் காணப்படும். கால்கள் சாம்பல் நிறத்தில் இருக்கும். உடலின் அடிப்பகுதி பழுப்பு நிறம்.

நீர்நீலைகளில் மிதக்கும் தாவர இலைகளை விரும்பிச் சாப்பிடும்

ஒரு சமயத்தில் 10 முட்டைகள் வரை இடும். முட்டைகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.