செந்தலைக் கிளி்

 

செந்தலைக் கிளி சற்றே சிறிய அளவில் இருக்கும். தலை முழுவதும் சிவப்பு நிறத்தில் இருப்பதால் இந்தப் பெயர்.

33 செ.மீ. நீளப் பறவை. வால் மட்டுமே 22 செ.மீ. வரை இருக்கும். மிக வேகமாகப் பறக்கும் பறவை.

இந்தியாவின் அதிகம் காணப்படும் பறவை.

பொதுவாகக் காடுகளில் வசிக்கும். இமயமலையில் அடிவாரத்தில் அதிகமாக இதைப் பார்க்கலாம். ஸ்ரீலங்காவிலும் இந்தப் பறவை அதிகம்.

நியூயார்க், ப்ளோரிடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இந்தப் பறவை உண்டு.

மிக அதிகமான இரைச்சலை உண்டு பண்ணும் பறவை.

ஒரு சமயத்தில் 4 முதல் 6 முட்டைகள் வரை இடும். தாய்ப் பறவைதான் குஞ்சுகளுக்கு இரை கொடுப்பது மற்றும் பறக்கச் சொல்லிக் கொடுப்பது ஆகியவைகளைச் செய்து குஞ்சுகளை நன்றாகக் கவனித்துக் கொள்ளும்.