கருவளைய தோல் குருவி

கழுத்துப் பகுதியில் கண்கள் வரைக்கும் ஒரு கருப்பு வளையம் இருப்பதால் கருவளைய தோல் குருவி என்ற பெயர் ஏற்பட்டது.

கண்கள் முற்றிலும் கருப்பாக இருக்கும். சிவந்த அலகு. அலகின் முனை மட்டும் சாம்பல் நிறத்திலிருக்கும். உடல் முழுவதும் சாம்பல் நிறம். வால் பகுதி வெள்ளையும் சாம்பலும் கலந்த நிறந்திலிருக்கும். சற்றே நீண்ட வெள்ளையும் சாம்பலும் கலந்த கால்கள்.

ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் தென்மேற்கு ஆசியாவின் பல இடங்களிலும் ஆப்ரிக்காவிலும் காணப்படும் பறவையினம்.

24 முதல் 28 செ.மீ. வரை நீளம் இருக்கும் சிறிய பறவை.

நீர் நிலைகளுக்கு அருகில் வசிக்கும். புழு பூச்சிகளை உணவாகக் கொள்ளும். ஒரு சமயத்தில் 2 முதல் 4 முட்டைகள் வரை இடும்.

குளிர்காலங்களில் வெதுவெதுப்பான இடங்களுக்குத் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளும் பறவை.