நாகம்போத்தன்

முனைவர் இரா.காமராசு
உதவிப்பேராசிரியர்
இலக்கியத்துறை

நாகம் போத்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பெயர் போத்தனார் எனக் குறிப்பிடப்படாமல் போத்தன் எனக் குறிப்பிடப்படுவதால் இவர் ஒரு குறுநில மன்னர் எனத் தெரிய வருகிறது. சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது குறுந்தொகை 282 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.

நவ்விமான் வரகுப் பயிரின் இலையைக் குறிக்கிறது. வெண்கூதாளம் பூ பூத்திருக்கிறது. இது கார் காலத்தின் அறிகுறி. இதனைக் கார்காலம் இல்லை என்பார் போல் வெண்கூதாளம் பூவே பூக்கவில்லை என்று கூட மக்கள் சொல்லுவார்கள் போலும், என்று தலைவியும் தோழியும் பேசிக்கொள்கின்றனர். இது இவரது பாடலில் சொல்லப்படும் செய்தியாகும்.

வரகு இலை

வரகு சிவப்பு நிறம் கொண்டது. அதன் பயிர் கருகருவெனப் பசுமை நிறம் கொண்டிருக்கும். இதனை மான் விரும்பி மேயும்.

வெண்கூதாளம் பூ

இந்தப் பூவின் காம்பு நீளமானது. காம்பின் உள்ளே நீண்ட துளை இருக்கும். இதனைப் பறித்து விளையாட்டுப் பிள்ளைகள் தம் கால்களில் வீரக்கழல் போல் அணிந்துகொள்வர்.

செம்மண்ணாகிய மேட்டு நிலத்தில் தழைத்துப்2 பருவம் வாய்ந்த வரகு நாற்றின் ஓரிலையை நாட்காலையில் மான்குட்டி மேய்ந்து உண்ணும் கடனைக் கழிக்கும் கார்காலம் என்று இவர் அப்பருவ நிகழ்ச்சியைப் புனைவர். பிரிவால் உடல் மெலிந்து மகளிரின் கைகளிலிருந்து வளைகள் கழன்று வீழ்தற்கு, வெண்கூதாள மலர்கள், காம்புகளிலிருந்து கழன்று உதிர்தலை இவர் உவமையாகக் கூறியுள்ளார்.