கொட்டையூர் த.சிவக்கொழுந்து தேசிகர்

முனைவர் த.கலாஸ்ரீதர்
உதவிப்பேராசிரியர்
ஓலைச்சுவடித்துறை

இவர் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள கொட்டையூர் எனும் கோடீச்சுரத்தில் பிறந்தவர். சரபோஜி மன்னரின் (1798 – 1832) அவைப் புலவராக இருந்தவர்.

சரபேந்திர வைத்திய முறைகள், சரபேந்திரர் வைத்தியம், சரபேந்திரர் சன்னிரோக சிகிச்சைகள் என்னும் நூல்களை எழுதியவர். திரு தாந்தவராயர் கேட்டுக் கொண்டதற்கிணங்கிச் சென்னைக் கல்விச் சங்கத்துப் புலவராகப் பணியாற்றி வந்தார். திருத்தணிகை விசாகப் பெருமாளையரும், சிவக்கொழுந்து தேசிகரும் சேர்ந்து 1857 ஆம் ஆண்டில் திருவாசகத்தை ஏட்டுச்சுவடியிலிருந்து பெயர்த்தெழுதி, அச்சிற் பதிப்பித்தார்கள். இதுவே முதன் முதல் அச்சிடப்பட்ட திருவாசகமாகும்.

சிவக்கொழுந்து தேசிகர் கோட்டிசுவரக் கோவை (1836), பெருவுடையாருலா (1837), சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் முதலியவற்றையும் இயற்றியுள்ளார்.