கல்கி அவதாரம்

முனைவர் கி.கந்தன்,
துறைத்தலைவர்,
சிற்பத்துறை.

கல்கி அவதாரம் என்பது பிரபஞ்சத்தில் வேதத்தின் செயல்பாடுகளும், வேத சடங்குகளும் மறைந்து தீயோரின் செயல்பாடுகளான பொய், மதச் செயல்பாடுகள் விஞ்சி நிற்கும் நிலையில் விஷ்ணு கல்கி எனப்படும் பத்தாவது அவதாரத்தை இறைவனாகிய திருமால் எடுத்திட உள்ளார்.
கல்கிஅவதாரம்

அந்நிலையில் தவ வலிமை மிகுந்த யக்ஞவால்கியா, கல்கியின் குருவாகச் செயல்படுவார் என்று அக்னிபுராணம் மேற்கோள் காட்டியுள்ளதாக T.A.கோபிநாதராவ் என்ற ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். இவ்வவதாரம் என்பது கலியுகத்தின் நிறைவில் தோற்றம் பெறும் அவதாரம் என்று நம்பப்படுகிறது.

கல்கி அவதாரத்தில் விஷ்ணு குதிரை முகமும், மனித உடலும் பெற்று தமது 4 கரங்களில் சங்கு, சக்கரம், கட்கம் மற்றும் கேடயம் ஏந்தி, கொடூர முகத்துடன் தோன்றிடுவார் என்று வைகானசாகமம் குறிப்பிடுகிறது. ஆனால் அக்னிபுராணம் இவ்வவதாரத்தை எடுத்துரைக்கும்போது விஷ்ணு மனித உருவில் நான்கு கைகளுடன் குதிரையின் மீது தோன்றுவார் என்றும், அவரின் கைகளில் வில், அம்பு, சங்கு, மற்றும் சக்கரம் ஆகியவற்றுடன் வருவார் என்று விளக்கியுள்ளது.