சண்டேசானுக்கிரகமூர்த்தி அல்லது சண்டிகேசுவரர்

முனைவர் வே.லதா,
உதவிப்பேராசிரியர்,
சிற்பத்துறை.

சிவனின் பஞ்சகிருத்யம் எனப்படும் ஐந்தொழில்கலும் உள்ளடங்கிய லீலாமூர்த்திகளில் சண்டேசபதம் பெறும் சண்டேசானுக்கிரகமூர்த்தி சோழநாட்டில் சேய்ஞலூரில் நடந்தேரியதாகக் கருதப்பட்டு வருகிறது.
சண்டிகேசுவரர் அனுக்கிரகம் பெறுதல் சண்டேசு
அனுக்கிரகமூர்த்தி

புராணவரலாறு :

சோழ நாட்டில் மண்ணியாற்றங்கரையில் அமைந்தது சேய்ஞலூர். இவ்வூர் தற்போது கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. காசியப்ப கோத்திரத்தைச் சேர்ந்த யக்ஞதத்தன் என்றொரு அந்தணர் சேய்ஞலூரில் வாழ்ந்து வந்தார். இவருக்கு விசரசர்மன் எனும் மைந்தன் இருந்தான். பள்ளிக்குச் செல்லும் வேளையில் பசுக்களை அடித்துத் துன்புறுத்துவதைக் காண்கிறான். பசு மேய்ப்பவர்களின் அனுமதி பெற்றுப் பசுக்களை மேய்க்கும் பணியைத் தாமே ஏற்றுக் கொண்டான். விசாரசர்மனும் மகிழ்ந்தான், பசுக்களும் துன்பத்திலிருந்து விடுபட்டது. பசுக்கள் பெருமளவில் பால் கொடுத்தன. பசுக்கள் மகிழ்ந்ததால் சுரந்து வெளியேறிய மீதப்பாலைச் சேகரித்தான் அதனைக் கொண்டு மணலினால் ஆன லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தான். தினமும் பசுக்களின் மீதப்பாலில் சிவபூஜை தினமும் செய்ததினால் சிவனின் மனம் குளிர்ந்தது. ஒருவருக்கொருவர் தகவலையளித்தனர். நேரில் கண்ட போதும் எப்பொழுதும் நிறைவேற்றும் சிவபூஜை பணியினைக் கண்டு ஆத்திரமுற்றனர். இறுதியில் விசாரசன்மனின் தந்தையிடம் முறையிட்டனர். யக்ஞ தத்தன், விசாரசர்மனை அருகில் சென்று அழைத்தார். சிவபூஜையில் இருந்த விசாரனின் காதில் கேட்கவில்லை. தந்தையின் சொற்களை ஏற்காத விசாரனின் லிங்கத்தை அவன் தந்தை காலால் உதைத்துச் சிதைத்தார். விசரன் சட்டென்று அருகிலிருந்த கோலை வீசினான். அது கோடாரியாக மாறி யக்ஞ தத்தனின் காலை வெட்டித் துண்டித்தது. யக்ஞ தத்தன் தரையில் வீழ்ந்தார். விசாரனின் சிவபக்தியை ஈசன் கண்டு மகிழ்ந்து உமையுடன் விசாரன் முன் தோன்றினார். சிவன் விசாரனைச் சிவகணங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டார். சண்டேச பதம் அடைந்த விசாரசர்மன் அன்றிலிருந்து “சண்டிகேசுவரர்” என ஈசுவனின் பெயரைத் தாங்கியவராக அழைக்கப்பட்டார்.

படிமக்கலை:

சிவாலயங்களில் சிவனும் உமையும் ஒரே பீடத்தில் அமர்ந்திருப்பார்கள். சிவனின் வலது கரமானது மலர் மாலையினைச் சண்டிகேசுவரருக்கு அணிவிப்பது போலவும் இடது கரம் மாலையினைத் தலையில் இடுவது போலவும் அமைந்திருக்கும். சண்டிகேசுவரர் அமர்ந்தவாறு அல்லது நின்றவாறு அஞ்சலி ஹஸ்தத்துடன் சிவனின் முன்னிருப்பார். பொன்னிறமேனியை உடையவர்.

குறிப்புகள்:

அம்சமத் பேதாகமம், உத்திரக்காமுக்காகமம், பூர்வகாரணாகமம், சில்பரத்னம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பு:

சேய்ஞலூரில் இந்நிகழ்வு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இச்சிற்பம் கங்கைக் கொண்ட சோழபுரத்தில் கல்சிற்பமாக இராஜேந்திரச் சோழனின் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.