கீழாநெல்லி

முனைவர் மரு.பெ.பாரதஜோதி
இணைப்பேராசிரியர்
சித்த மருத்துவத்துறை

வேறு பெயர்கள் : கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி

ஆங்கிலப் பெயர் : Indian Phyllanthus

தாவரவியல் பெயர் : Phyllanthus amarus.

செய்கைகள் (Actions)

சிறுநீர்ப்பெருக்கி - Diruetic
துவர்ப்பி - Astringent
வீக்கமுருக்கி - Deobstruent

மருத்துவப் பயன்கள் :

- கீழாநெல்லி வேர் மற்றும் இலைகளை உலர்த்திப் பொடித்து புண், வீக்கம் இவற்றிற்குப் பூச தீரும்.

- கீழாநெல்லிக் குடிநீர் பசித் தீயைத் தூண்டும்.

- கீழாநெல்லி சமூலம் ஆமணக்கிலை இரண்டையும் அரைத்து பாலில் கலந்து குடித்து, உப்பில்லாமல் சாப்பிட மஞ்சள் காமாலை தீரும்.

- கீழாநெல்லி வேரை மட்டும் பறித்து உடன் அரைத்துக் கொடுத்தால் காமாலை தீரும்.

- கீழாநெல்லியின் தண்டுகளை மட்டும் எடுத்து சாறு பிழிந்து ஆமணக்கு எண்ணெயில் கலந்து கண் காச நோயில் விட தீரும்.

- கீழாநெல்லியை அரைத்து பசுந்தயிரில் கலந்து உண்டு வர நோய்க்குப் பின் ஏற்படும் களைப்பை நீக்கும்.