கோவை

முனைவர் மரு.பெ.பாரதஜோதி
இணைப்பேராசிரியர்
சித்த மருத்துவத்துறை

ஆங்கிலப் பெயர் : Ivy gourd

தாவரவியல் பெயர் : Coccinia grandis.

செய்கைகள் (Actions)

கோழையகற்றி - Expectorant
இசிவகற்றி- Antispasmodic
வெப்பமுண்டாக்கி - Stimulant

மருத்துவப் பயன்கள் :

- கோவை இலையைப் பறித்து நிழலில் உலர்த்திச் சூரணம் செய்து தினமும் இருவேளை மோரில் சாப்பிட இரத்த்த்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

- இலையை எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, படை, சொறிசிரங்கு, கொடிய புண் இவற்றிற்குத் தடவ தீரும்.

- இலைப் பொடி உடல் வெப்பத்தைக் குறைக்கும்.

- கோவைக் காயை உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும்.

- கோவைக் கிழங்கைப் பொடித்துக் கொடுக்க நீரைப் பெருக்கும்.

- கிழங்கின் சாறு நீரிழிவு, படை போன்றவற்றைத் தீர்க்கும்.

- கோவை இலையைக் குடிநீரிட்டுத் குடித்து வர கண் எரிச்சல் தீரும்.