நிறமும் மூலிகைப் பண்புகளும்
முனைவர் வா. ஹஸீனாபேகம்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
சித்த மருத்துவத்துறை
இயற்கையில் கிடைக்கும் இலை, பூ, பழங்கள்,
காய்கறிகள் தாவர உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பல நிற வகையான
காய்கறிகள், கனிகள், பூக்கள் உள்ளன. இத்தகு நிற வகை உணவுகளில் ‘ஆந்தோசயனின்’
என்ற பிலவோனாய்டு மூலக்கூறு உள்ளது. இது தாவரங்களுக்கு சிவப்பு, நீலம், கருநீலம்
போன்ற நிறங்களை அளிக்கின்றது.
இந்த நிறமானியான ஆந்தோசைனின் அமில நிலையில் சிவப்பு நிறமாகவும், கார நிலையில்
அடர்த்தி நிறமாகவும் உள்ளது. சிவப்பு நிறச் செம்பருத்திப் பூக்கள் அமில நிலையைக்
கண்டறிந்து கணக்கிட்டுள்ளனர். அதே போல் கருநீலச் சங்குப்பூ கார நிலைத் தன்மையும்
கணக்கிடப்பட்டு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் நிறங்களின் அடிப்படையில் நுண் தனிமத் தாதுக்கள் மிகுந்த நிலையும்
கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிற உணவு வகைகளில் மெக்னீசயம், மங்கனீஸ், அயம்கால்சியம்,
அலுமினியம் தாதுக்கள் உள்ளது அறியப்பட்டது.
இயற்கையில் தாவரங்களில் உணவுப் பொருட்கள் ஒளிச்சேர்க்கையின் மூலம் உற்பத்தி
செய்யப்படுகின்றன. அவை முதன்மை உற்பத்தியாகவும், நிறமானிகள் மற்றும் வேதிமப்
பொருட்கள் உற்பத்தியாவது இரண்டாம் நிலையாகவும் உள்ளது. இந்த இரண்டாம் நிலை
மூலப்பொருட்கள் மருத்துவக் குணமுடையவை என்று கருதப்படுகின்றன. அவற்றுள் இந்த
நிறமானிகளான ஆந்தோசயனின் என்ற பிளேவோனாய்டும் அடங்கும்.
கேரட் போன்ற சிவப்பு நிற உணவுகளில் கரோட்டினாய்டு என்ற நிறமானி உள்ளது. இதே
போல் தக்காளியில் லீக்கோ பீனாகவும், மிளகாயில் கேப்சோரூபினாகவும் காணப்படுகின்றது.
இந்தக் கரோட்டினாய்டுகள், தனித்த அயனிகள் வெகுவாகப் பிணைத்துக் கொள்ளும்
சக்தி கொண்டுள்ளது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தனித்த அயனிகள் வெகுவாக பிணைத்துக் கொள்ளுவதால் புற்றுச் செல்கள் அளிக்கும்
ஆற்றல் கொண்டுள்ளது.
பச்சை இலைக் காய்கறிகளில் உள்ள பச்சையம் மூலக்கூறான குளோரோபில்லின் என்ற
தாவர நிறமானி தனித்த அயனிகளைச் சிதைத்து உடலின் திசுக்களுக்குப் பாதுகாப்பு
அளிக்கின்றது.
தினமும் நாம் உட்கொள்ளும் உணவில் 1 கிராம் அளவு பீனாலிக் மூலக்கூறுகள் உள்ளன.
இவை புற்றுச் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டுள்ளன. அதாவது மரபணுக்களுடன்
பல் நிலை பீனாலிக் மூலக்கூறுகள் பிணைத்துக் கொண்டு, புற்றுநோய் ஏற்படுத்தும்
வேதிமக் காரணியின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து நோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றன.
உணவின் நிறங்களும் மருத்துவப் பண்புகளான தனித்த அயனிகள் எதிர்ப்பானாகவும்
புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் ஆற்றல் அறிவியல் ஆய்வின் மூலம்
உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகு உணவுகள் உட்கொண்டு உடல் ஆரோக்கியமாக்க் காப்போமாக!
|