|
நன்னாரி வேர்
முனைவர் மரு.பெ.பாரதஜோதி
இணைப்பேராசிரியர்
சித்த மருத்துவத்துறை
வேறு பெயர்கள்
: பாதாள மூலி, கிருஷ்ண வல்லி, அங்காரி மூலி
ஆங்கிலப் பெயர் : Indian Sarasparilla
தாவரவியல் பெயர் : Hemidesmus indicus.
செய்கைகள்
உடல் தேற்றி
- Alterative
வியர்வைப் பெருக்கி - Diaphoretic
உள் அழல் ஆற்றி - Demulcent
உரமாக்கி - Tonic
சிறுநீர்ப்பெருக்கி - Diuretic
மருத்துவப் பயன்கள் :
- நன்னாரி வேரின் சாறு கண்ணுக்குக் குளிர்ச்சி
தரும்.
- நன்னாரி வேர்ப்பொடியைப் பாலுடன் உண்ண சிறுநீரைப் பெருக்கும். சிறுநீரகக்
கற்களைக் கரைக்கும் குணமுடையது.
- நன்னாரியை ஊறவைத்த குடிநீரை 30 மி.லி குடித்து வர செரியாமை தோல் நோய்கள்,
வாத நோய்கள் தீரும்.
- ஊறல் குடிநீரைப் பால், சர்க்கரை சேர்த்து சூடாகச் சாப்பிட ஆண்மைப் பெருக்கியாகச்
செயல்படும்.
- நன்னாரி வேர்ச்சூரணத்தைத் தேனில் குழைத்து உண்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.
- வேர்ப்பட்டையைப் பால் அல்லது சர்க்கரையில் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும்
வயிற்றுப்போக்கு குணமாகும்.
- நன்னாரி வேரைப் பச்சையாகக் கொண்டு வந்து ஒன்றிரண்டாக வெட்டிக் கொண்டு நீரில்
ஊறவைத்துக் குடித்து வர கிரந்தி நோய் தீரும்.
- பச்சை நன்னாரி வேரை நீர் விட்டு அரைத்து பாக்களவு வெந்நீரில் தினம் காலையில்
ஒரு வேளை கொடுத்து வர பற்களிலிருந்து வடியும் இரத்தம் நிற்கும்.
- நன்னாரி வேரை நன்கு சுத்தம் செய்து அரைத்து, பசும்பாலில் அரைத்து, மூன்று
தடவை பாலில் கரைத்து வடிகட்டி, தினமும் 3 வேளை 5 நாட்கள் உண்டு வந்தால் உதிரப்போக்கு
தீரும்.
|