துத்தி

முனைவர் மரு.பெ.பாரதஜோதி
இணைப்பேராசிரியர்
சித்த மருத்துவத்துறை

தாவரவியல் பெயர் : Abutilon indicum.

செய்கைகள் (Actions)

தாது வெப்பகற்றி - Sedative
சிறுநீர்ப் பெருக்கி - Diuretic
உள்ளழலாற்றி - Demulcent
மலமிளக்கி - Laxative

மருத்துவப் பயன்கள் :

- துத்தி இலைச் சூரணம் மூலநோயைக் குணப்படுத்தும்.

- இலைச் சாறுடன் நெய் சேர்த்துக் கொடுகக் கழிச்சல் தீரும்.

- துத்தி விதைக் குடிநீர் வெள்ளையைக் குணமாக்கும்.

- இலைக் குடிநீரால் வாய் கொப்பளிக்கப் பல் ஈறு நோய்கள் குணமாகும்.

- விதையைப் பொடித்துச் சர்க்கரையுடன் கலந்து மூவிரல் அளவு காலை, மாலை சாப்பிட கரும்புள்ளி தீரும்.

- துத்திப்பூச் சூரணம், சர்க்கரை இரண்டையும் சமஅளவு எடுத்து காலை, மாலை உண்டு வர இருமல், இரைப்பு, இரத்த வாந்தி தீரும்.

- துத்தி இலையைப் பறித்து பாலில் அரைத்து உட்கொண்டு வர வயிற்றுப்புண் (Gastric ulcer) தீரும்.