தன் மதிப்பீடு : விடைகள் - II
1) |
உமறுப் புலவர் பயன்படுத்திய அரபு மொழிச் சொற்களை
எழுதுக. இசுலாமியர்கள் நாளும் பயன்படுத்தும் சொற்களில் அரபுச் சொற்களும் கலந்துள்ளன. சீறாவின் கலிமா என்ற சொல் மூல மந்திரத்தினைக் குறிக்கிறது. இதன் பொருள் நம்பிக்கை கொள்வது ஈமான் எனப்படும். இந்த நம்பிக்கையைச் செயல்படுத்துவது அமல் ஆகும். இவ்வாறு அரபுச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். |