இசுலாமிய இரட்டைக் காப்பியங்கள் என்று போற்றப்படும் சிறப்புக்கு உரியவை சீறாப் புராணமும், சின்ன சீறாவும் ஆகும். சீறாப் புராணத்தை உமறுப் புலவரும், சின்ன சீறாவைப் பனீ அகமது மரைக்காயரும் பாடியுள்ளனர். சீறாப்புராணம், நபிகள் நாயகத்தின் ஐம்பத்தேழு வயதுவரை உள்ள வரலாற்றைத் தெரிவிக்கிறது. சீறாப் புராணம் முடிந்த இடத்திலிருந்து நபிகள் நாயகத்தின் இறப்பு வரையிலான 63 வயது வரையுள்ள வரலாற்றைச் சின்ன சீறா தெரிவிக்கிறது. இரண்டு காப்பியங்களும் இசுலாமியத் தன்மைக்கு உட்பட்டு, வருணனைகளையும் இலக்கிய நயங்களையும் கொண்டுள்ளன.
|