தன் மதிப்பீடு : விடைகள் - I
 

1)

இராவண காவியம் - பெயர் விளக்கம் தருக.

புலவர் குழந்தை இயற்றிய காவியத்திற்கு இராவண காவியம் என்று பெயர். இராவணனைக் காப்பிய நாயகனாகக் கொண்டு படைக்கப்பட்ட காவியம் என்பது இதன் பொருளாகும். இராவணன் என்பதற்குப் பேர் உரிமை உடையவன், பேரழகன் என்பன பொருளாகும். எனவே தமிழர்களுக்குப் பேர் உரிமை பூண்டவனாகவும் பேர் அழகு உடையவனாகவும் இருந்த இராவணன் பற்றிய காவியம் இராவண காவியம் ஆகும்.


முன்