தன் மதிப்பீடு
: விடைகள் - II |
|
3) |
இராவண
காவியத்தின் அணிநலச் சிறப்பிற்கு
ஒரு
சான்று தருக.
|
இராவணனைக் கண்ட வண்டார்குழலி நாணத்தால் தன் முகத்தை மூடிக் கொண்டாள் எனக் கூறவந்த புலவர் குழந்தை, பூங்கைப் போதால் முகமதியம் பூப் போன்ற கைமலரால் முகமாகிய நிலவில் பூத்த குவளை மலர்களை மூடிக் கொண்டாள் என்கிறார். குவளை மலர் மகளிரின் விழிகளுக்கு உவமையாகக் கூறப்படுவதாகும். |