3.5 தொகுப்புரை

புலவர் குழந்தையின் இராவண காவியம் இராமாயணத்திற்கு எதிராகத் தோன்றியது. இராவணனைக் காவிய நாயகனாகக் கொண்டது. இராமனை எதிர்நிலைத் தலைவனாகக் (Villain) கொண்டது. தமிழரின் தமிழின் சீர்மையைப் பேசுவது. இராவணன் பெருமையைப் புகழ்வது.

இராவணன் தன் பாட்டி தாடகையையும் தங்கை காமவல்லியையும் இராமனால் இழந்தான். உயிர்க்கொலை வேள்வியைத் தமிழர் ஆட்சியில் கடுமையாக எதிர்த்தான். சீதையைக் கவர்ந்து சென்றான். அவளைத் தந்தையைப் போல, தமையனைப் போலப் போற்றினான். சீதையே இராவணனின் உள்ளம் அறிந்து போற்றினாள் என்பதை அறிய முடிகிறது.


தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1.

புலவர் குழந்தையின் தமிழ் உணர்ச்சிக்குச் சான்று தருக.

விடை
2.

இராமாயணத்திலிருந்து இராவண காவியம் காவிய மாந்தர்க்குப் பெயர் சூட்டலில் மாறுபட்டுள்ளதா? எவ்வாறு?

விடை
3.

இராவண காவியத்தின் அணிநலச் சிறப்பிற்கு ஒரு சான்று தருக.

விடை
4.

தமிழர் பண்பாட்டுக் கூறுகளுள் இரண்டினை விளக்குக.

விடை