தன் மதிப்பீடு :
விடைகள் - II |
|
4) |
தமிழர் பண்பாட்டுக்
கூறுகளுள் இரண்டினை விளக்குக. |
உலகின் மிகத் தொன்மையான இனம் தமிழர் இனமாகும். அவர்களின் வாழ்வியல் நெறியில் சில பண்பாட்டுக் கூறுகள் சிறப்பிடம் பெறுகின்றன. அவற்றுள் ஒன்று பிறன்மனை நோக்காத பேராண்மை; மற்றொன்று ஒழுக்கமுடைமை. பிறன்மனை நோக்காத பேராண்மைக்குச் சான்றாக இராவணன் செயல் அமைந்துள்ளது. இராமனின் மனைவி சீதையை இராவணன் கவர்ந்தான். அவளுடைய கற்பிற்குக் களங்கம் வராமல் அவளைக் காத்தான். அவளைத் தன் உடன்பிறப்பாகக் கருதி நடத்தினான். ஒழுக்கத்தை உயர்வாகக் கருதினர் தமிழர். தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஒரு நன்னெறி முறைமையே ஒழுக்கம் எனப்படும். ஒழுக்கத்தை முதலில் பழக்கம் ஆக்கிக் கொண்டனர். அதுவே தொடர்ந்து செய்யப்பட்டதால் வழக்கம் ஆயிற்று. இதனை இராவண காவியம். ஒழுக்கம் என்பது உயிரினும்
மேல்அதன் என்று போற்றுகிறது. |