6.7 தொகுப்புரை

வெ.ப.சுப்பிரமணிய முதலியாரின் அகலிகை வெண்பா, பாலபாரதி ச.து.சுப்பிரமணிய யோகியாரின் அகல்யா, கவிஞர் தமிழ்ஒளியின் வீராயி ஆகிய மூன்று குறுங்காப்பியங்கள் பற்றிய கருத்துகள் இப்பாடப் பகுதியில் கூறப்பட்டுள்ளன. முன்னிரு குறுங்காப்பியங்களும் ஒரு பழங்கதையைக் கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் கருப்பொருள் கற்பு. இந்திரனால் கற்பிழந்த அகலிகையைப் பற்றி அவளுடைய கணவன் கௌதமன் மற்றும் இராமன், விசுவாமித்திரன் ஆகியோர் கொண்ட கருத்துகள் அவ்விரு குறுங்காப்பியங்களில் ஆராயப்பட்டுள்ளன. வீராயி என்னும் குறுங்காப்பியத்தில் வீராயி என்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்களும், சாதிய வெறிக்குத் தன் காதலனோடு பலியாவதும் பேசப்பட்டன.


தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1.

இராமனின் பாதத்தூளிபட்ட அகலிகை என்ன ஆனாள்?

விடை
2.

அகல்யா என்ற குறுங்காப்பியத்தில் எது கருப்பொருளாக அமைந்துள்ளது?

விடை
3.

வீராயி காப்பியம் எடுத்துரைக்கும் செய்தி யாது?

விடை
4.

இந்திரன் தவறு செய்தமையால் எதற்கு ஆளானான்?

விடை
5.

அகல்யா குறுங்காப்பியம் எதைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளது?

விடை