6.5 தொகுப்புரை

இப்பாடத்தால் அறியும் செய்திகள் இங்குத் தொகுத்துக் கூறப்படுகின்றன.

  • வைணவ சமயத் தொண்டர்கள் ஆழ்வார் எனப்பட்டனர். இறைவன் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருப்போர் என்பது ஆழ்வார் என்பதன் பொருள்.

  • ஆழ்வார்கள் பன்னிருவர். அவருள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற மூவரும் முதலாழ்வார் எனப்படுவர்.

  • இம்மூவர்க்கும் பொதுவான வரலாறு அமைந்துள்ளது. மூவரும் தொண்டை நாட்டில் பிறந்தோர்; வெண்பாவில் திருமாலைப் பாடியோர்; மூவரையும் சேர்த்தே வணங்குவது வைணவ மரபு. மூவரும் திருமாலால் திருக்கோவலூரில் ஆட்கொள்ளப்பட்டனர்.

  • மூவரும் பாடிய பிரபந்தங்கள் நாலாயிரத்தி்ல் இயற்பா என்ற பிரிவில் அடங்கும்.

  • மூவரும் தம் பிரபந்தங்களில் திருமாலின் திருமேனி, திருமாலின் அவதாரச் செயல்கள், அவரை வழிபடும் முறை, வழிபடுவதால் அடையும் பேறு முதலியவற்றை விளக்கியுள்ளனர்.

  • ஆழ்வார்கள் ஐம்புலன்கள், எண்திசைகள், ஐம்பூதங்கள், வேதம், அறம் முதலிய அனைத்தையும் திருமாலாகவே காண்கின்றனர்.

  • சிவபெருமானை முழுமுதற் பொருளாகக் கொள்வர் சைவர். ஆனால் ஆழ்வார்கள் சிவபெருமானிடத்தும் திருமாலையே காண்கின்றனர். அஃதாவது, சிவனும் திருமாலின் ஒரு கூறு என்கின்றனர்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. பூதத்தாழ்வார் பிறந்த திருப்பதி எது?

விடை

2. பூதத்தாழ்வார் என்ற பெயர் அமையக் காரணம் யாது?

விடை

3.

பெருந்தமிழன் என்று தன்னை அழைத்துக் கொண்ட ஆழ்வார் யார்?

விடை

4.

பேயாழ்வார் என்று பெயர் அமையக் காரணம் யாது?

விடை