6.6 தொகுப்புரை புதிய நூல் முயற்சி குறைந்து பண்டை நூல்களுக்கு விளக்கம் விரிவாக ஏற்படக் காரணம் அரசியல் சூழலே எனலாம். இக்காலப் பகுதியில் உரைகள் அதிகம் தோன்றின. பெரும்பாலான ஆசிரியர்களும், உரையாசிரியர்களும் வடமொழியறிவைக் கொண்டிருந்தனர். முகமதியர் ஆதிக்கம் காரணமாக அவர்களது சொற்கள் தமிழ் இலக்கியத்தில் புகுந்தன. தமக்கெனத் தனிச் சொல்லாட்சி கொண்ட பரிதியார் உரை; பிற நூலில் காணாத அளவு பாடலமைதி கொண்டது. பெருந்திரட்டு, குறுந்திரட்டு முதலிய பல திரட்டுகளும் தோன்றின. மணிப்பிரவாள நடையில் அமைந்த முதல் உரைநடை நூலாக ஸ்ரீபுராணம் அமைகிறது. இக்காலக் கட்டத்திலுள்ள இலக்கிய வளர்ச்சியில் சித்தர்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
|