நண்பர்களே! இதுவரை நாயக்கர் காலத் தமிழ் குறித்துப்
பல செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து
என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை
மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
•
நாயக்கர் காலத் தமிழில் வடமொழிச் செல்வாக்கால்
உண்டான பல்வேறு ஒலி மாற்றங்களை அறிந்து கொள்ள முடிந்தது.
•
தமிழ்மொழியில் உரைநடையின் தாக்கத்தாலும்
பேச்சுமொழியின் செல்வாக்காலும் இலக்கண அமைப்புகளில் ஏற்பட்ட
ஏராளமான மாற்றங்களை உணர முடிந்தது.
•
நாயக்கர் காலத் தமிழ் வரிவடிவில் வீரமாமுனிவர்
செய்த எழுத்துச் சீர்திருத்தம் மிக முக்கியமானது என்பது புலனாகிறது.
•
தமிழ்மொழியில் எழுந்த இலக்கிய இலக்கணங்கள்,
எளிய நாட்டுப்புற இலக்கிய வகைகள் ஆகிய இவையனைத்தும் நாயக்கர்
காலத்தில் நிகழ்ந்த மொழி மாற்றங்களை அறிந்து கொள்ளும் ஆதாரங்களாக
விளங்குவதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்!