6.3 இல்வாழ்க்கை
• இல்வாழ்க்கைக்கு உரிய சில நெறிகள்
விதையின்றி விளைவில்லை. செயல்கள்
முயற்சியின்றி நடைபெறா. உணவு இல்லாது உயிர் வாழ்தல் இயலாது (பழ:327).
குறிப்பறிதலும் விருந்தோம்பலும் உடைய பெண் இல்வாழ்க்கைக்கு உகந்தவள் (பழ:330).
மக்களுக்கு அறிவு ஊட்டுதல் தந்தையின் கடன் (பழ:331). கல்வியறிவால்
சிறந்த மக்களைத் தாயார் பெரிதும் விரும்புவர் (பழ:332) என்று இல்வாழ்க்கைக்கு
உரிய நெறிகளைச் சொல்கிறது பழமொழி இலக்கியம்.
6.3.1 பொருளைப் போற்றுதல்
இல்லறத்தில் இருப்போர்க்குப் பொருளைப் போற்றுதல் மிக
அவசியம். ஏனென்றால் பொருள்
இல்லார்க்கு
இவ்வுலகில்லை. எனவே பொருள் ஈட்டும்
காலத்து,
பின்னாளில் உதவும் பொருட்டு, பொருளைச் சேமித்துக்
காவல் செய்ய வேண்டும். நத்தை எதிர்காலத்தை நோக்கி
நீரைச் சேமித்துக் காவல் செய்வதைப்
போலப்
பிற்காலத்திற்காகக் பொருளைச் சேமிக்க வேண்டும்.
சேணோக்கி நந்துநீர் கொண்டதே
போன்று |
(பழ:205)
|
(நந்து = நத்தை; சேண் நோக்கி = எதிர்காலம்
நோக்கி)
என்ற பழமொழி இக்கருத்தை விளக்குகிறது.
6.3.2 ஈகை
இல்வாழ்பவன் ஈகைக்குணம் உடையவனாய் இருத்தல்
வேண்டும். உலக வழக்கில் சிறிய மீனைப்போட்டு பெரிய
மீனைப் பிடித்தல் என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள்.
இலாபநோக்கில் செய்யப்படும் ஒரு தந்திரமாகத்தான்
இப்பழமொழியை நாம் அறிந்திருக்கிறோம்.
ஆனால்
முன்றுறையரையனார் உண்மையில் நம் வாழ்க்கைக்குப்
பயன்தரத்தக்க ஓர் உயரிய வழியைத்தான் இப்பழமொழி
வாயிலாகக் கூறுகிறார்.
இம்மையில் தம்மால் இயன்ற சிறிய
பொருளை
உள்ளன்போடு வறியவர்க்கு ஈய வேண்டும்.
இந்த
நல்வினை செய்து மறுமையில் வீடுபேறு முதலியன பெற
நினைக்க வேண்டுமாம். அப்படி நினைப்பவர்கள் அயிரை
என்னும் சிறிய மீனைத் தூண்டிலில் கோத்துவிட்டுப் பெரிய
வரால் மீனை இழுப்பவரோடு ஒப்பர்.
சிறிய பொருள் கொடுத்துச் செய்த
வினையால்
பெரிய பொருள் கருதுவாரே - விரிபூ
விராஅம் புனலூர வேண்டயிரை விட்டு
வராஅல் வாங்கு பவர் |
|
(பழ:372)
|
(விராஅம் = கலந்திருக்கின்ற, அயிரை
= ஒருவகை மீன், வராஅல் = ஒருவகை மீன்)
இறைத்தலால் குளத்து நீர் வற்றாதது
போல
ஈதலால் செல்வம் குறைவுபடாது |
|
(பழ:374)
|
வறியவர்க்குப் பொருள்ஈந்து
ஏழையாயினார் இல்லை |
(பழ:377)
|
இறைக்கின்ற கிணறு சுரப்பதைப்போலக்
கொடுக்கக்
கொடுக்கப் பொருள் வளரும் |
|
(பழ:378)
|
என்று சொல்லப்படும் கருத்துகள் மற்றவர்க்குக்
கொடுக்க
வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கக் கூடியன.
• நன்றியில் செல்வம்
செல்வம் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் அதை நன்கு
பயன்படுத்தத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் அச்செல்வம் பயனின்றி
அழியும்.
எப்படித் தெரியுமா?
ஒரு நாயின் கையில் முழுத் தேங்காய் கிடைத்தது. அதை
உண்ண நாய்க்கு அளவிட முடியாத ஆசை. ஆனால்
அதை உரித்துத் தின்னும் வழியறியாது. மற்றவர்க்குக்
கொடுக்கவும் மனமில்லாமல் தானும் உண்ண முடியாமல்
உருட்டிக் கொண்டே இருக்கும். அதுபோலத்தான்
மற்றவர்க்குக் கொடுக்கவும் தான் அனுபவிக்கவும்
அறியாதவர் பெற்ற செல்வமும் பயனின்றி அழியும்.
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான்
பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம் |
|
(பழ:216)
|
(வழங்கல் = ஈதல்; துய்த்தல் = அனுபவித்தல்;
தெங்கம் பழம் = தேங்காய்)
சிலர் தம்மிடம் ஒரு பொருள் கேட்டவருக்குக் கொடுப்பதாகச்
சொல்லிக் கேட்டவரை அலையவைப்பர். இத்தகைய ஏமாற்றுச்
செயலைத் தக்க பழமொழியால் விளக்குகிறார்
புலவர்.
பசுவுக்குப் புல் கொடுப்பார், வாயிலிடுவது போல்காட்டி,
புல்லை அதன் கழுத்தில் கட்டி விட்டால் என்ன ஆகும்? பசு
தன் கழுத்தில் கட்டிய புல்லைத் தின்னும் பொருட்டு முயன்று
துன்புறும். அது போலவே பொருளைக்
கேட்டவர்
பொருளைப் பெற வேண்டும் என்ற ஆசையால்
கால
நீட்டிப்பினால் பலநாளும் வந்து துன்புறுவர்.
வாயுறைப் புற்கழுத்தில் யாத்து
விடல் |
|
என்பது பழமொழி (222).
6.3.3 அறம் செய்தல்
வாழ்க்கையில் பொருள் ஈட்டுவது இன்றியமையாத ஒன்று.
எல்லோரும் ஈட்டிய பொருளைச் செலவு
செய்து
அனுபவிப்பர். சேர்த்து வைப்பவரும் உண்டு. சேர்த்து
வைக்கும் பொருள் பின்னால் நமக்கு உதவாது. ஆனால்
செய்யத் தகுந்த இடம் நோக்கி அறம் செய்தால் பின்னால்
தளர்ந்த காலத்து அதுவே உதவும்
பொருளாகும்.
அதைத்தான் எய்ப்பினில் வைப்பு என்கிறது பழமொழி.
வைத்ததனை வைப்பென்று உணரற்க
தாமதனைத்
துய்த்து வழங்கி இருபாலும் - அத்தகத்
தக்குழி நோக்கி அறம்செய்யின் அஃதன்றோ
எய்ப்பினில் வைப்பென் பது |
|
(பழ:358)
|
(தக்குழி = தகுந்த இடம் நோக்கி; எய்ப்பினில்
= தளர்ந்த
காலத்து)
செய்ய வேண்டிய அறத்தைப் பின்னால்
செய்து
கொள்ளலாம் எனக் காலம் கடத்தினால்
முதுமை
வந்துவிடும். முதுமை வந்தால் நோயும் உடன் வரும். நோய்
வந்தால் அறம் செய்ய இயலாது. சிந்தனை
அறத்தில்
நின்றாலும் நோய் அது செய்வதற்குத்
தடையாகும்.
அந்நிலை, நாயைக் கண்ட பொழுது அதை
ஓட்டக்
கல்லைத் தேடினால் கல்லில்லாத தன்மையை ஒக்கும்
என்பர்.
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் |
|
என்ற உலகியல் வழக்கைக் கருத்தில் கொண்டு எழுந்த பாடல்
இது.
மாய்வதன் முன்னே வகைப்பட்ட
நல்வினையை
ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து
நோய்காண் பொழுதின் அறம்செய்வார்க் காணாமை
நாய்காணின் கற்காணா வாறு |
|
(பழ:361)
|
கலைவல்ல சிற்பி கல்லில்
நாயைச் செதுக்கினான். நாய் கல்லில் அழகுற உருப்பெற்றது. காண்பவர் அதைக்
கல்லென்று நினைத்தபோது கல்லாகத்தான் அது காட்சியளித்தது. நாயின் உருவத்தைக்
காணும்போது அது நாயெனவே தோன்றியது. கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக்
கண்டால் கல்லைக் காணோம் என்ற சித்தாந்தப் பொருளையும் இப்பழமொழி விளக்கி
நிற்கிறது.
6.3.4 உறவினர்
உறவினர் பற்றிப் பழமொழி என்ன சொல்கிறது
என்று
பார்ப்போமா! உறவினர்க்கு உற்ற துன்பத்தைத்
தமக்கு
உற்றதாகவே உணர வேண்டும். உணர்ந்து அவர்
துன்பங்களைக் களைய முற்படவேண்டும். அவ்வாறு
களையாவிடில் அவர் நிலை உமியைக் குற்றுதலால்
கை
வருந்துமாற்றை ஒக்கும். உறவினரையே நம்பி அவர் வேறு
முயற்சியின்றி இருத்தலின் அவர் கைவிட்ட விடத்து வருந்தித்
துன்புறுவர்.
உமிக் குற்றுக் கை வருந்துமாறு |
(பழ:348)
|
என்பது பழமொழி.
ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது அவர்க்கு நல்ல உறவினர்
எனப்படுவார் விரைந்து அத்துன்பத்தை நீக்குபவரே.
அவ்வாறு நீக்கும் செயல் ஆற்றல் உள்ள
உறவினர்,
இல்லத்தின்கண் உள்ள மருந்து மரத்தினை ஒப்பர்
மனைமர மாய மருந்து
|
(பழ:350)
|
என்பது பழமொழி.
கோழி மிதித்தா குஞ்சு முடமாகி விடும்?
என்ற பழமொழி
நாம் அறிந்த ஒன்று. சுற்றத்தார், மனம் நோக உரைத்தாலும்
அவரை நல்வழியில் நிறுத்தும் கருத்துடையர்
என்பதை
விளக்குகிறது ஒரு பழமொழிப் பாடல். தாயால் மிதிக்கப்பட்ட
கால் முடம்படுதல் இல்லை அல்லவா? அதுபோல் மனம்
வருந்த உரைக்கப்படும் மொழிகள் உறவினர்க்குத் துன்பம்
தருவதில்லை. நன்மையே செய்யும். பாடலைப் பாருங்கள்!
உளைய உரைத்து விடினும் உறுதி
கிளைகள்வாய்க் கேட்பது நன்றே - விளைவயலுள்
பூமிதித்துப் புட்கலாம் பொய்கைப் புனலூர!
தாய்மிதித்து ஆகா முடம் |
|
(பழ:353)
|
(உளைய = வருந்தும்படி; கிளை = சுற்றம்)
6.3.5
நல் ஒழுக்கம்
தான் அழிய நேர்ந்தாலும் பழியொடு
பட்டவற்றைச்
செய்யாதிருப்பதே நல்ஒழுக்கம். கடல் சூழ்ந்த இவ்வுலகில்
மலைகள் தேய்வடையும், பழிச்சொல் மாறுதல் இல்லை.
ஆதலால் தனக்குக் கேடு வருவதாக இருந்தாலும் தனக்கு
ஒரு சிறிதும் பழி பயவாத செயல்களைச் செய்தலையே
ஒவ்வொருவரும் விரும்ப வேண்டும்.
கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்
வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை
முற்றுநீர் ஆழி வரையகத்து ஈண்டிய
கல்தேயும் தேயாது சொல்.... |
|
(பழ:39)
|
(கெடுவல் = துன்பம் நேரும்; வடு = குற்றம்)
பிறர்க்கு இன்னா செய்யாமையும் நல் ஒழுக்கமே.
எத்துணை
எளியராயினும் தீங்கு செய்யக் கூடாது. (பழ:43). முற்பகல்
செய்யின் பிற்பகல் விளையும் (பழ:46). நம்மால் துன்புற்று
ஒருவர் அழுத கண்ணீர் நம் செல்வத்தைத் தேய்க்கும்
படை என்பார் வள்ளுவர் (குறள்:555). வலிமை
உடையார் எளியாரை நலிவுறச் செய்தால் ஆற்றாது அவர்
அழுத கண்ணீர் வலியவர்க்குக் கூற்றமாய் விடும் என்பது
பழமொழி (பழ: 47).
|