1.5
தொகுப்புரை நண்பர்களே! இதுவரையிலும் சிற்றிலக்கியம் என்பது குறித்துப் பார்த்தவற்றைத் தொகுத்துக் காண்போமா? தமிழ் மொழியில் பல இலக்கிய வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கதும் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பதுமாகச் சிற்றிலக்கியம் திகழ்கின்றது.
சிற்றிலக்கியம் என்ற பொதுவான இலக்கிய வகையுள் பல
இலக்கிய வகைகள் காணப்படுகின்றன. சிற்றிலக்கியங்கள் பல
நிலைகளில் பாகுபாடு செய்யப்படுகின்றன. அரசியல், சமய,
சமுதாயக் காரணங்களால்
சிற்றிலக்கிய வகைகள் பல தோன்றி
உள்ளன. அவை இலக்கிய வகைமை பெற்றுள்ளன.
|