2.6 தொகுப்புரை நண்பர்களே! தூது இலக்கியம் பற்றி இதுவரையிலும் பார்த்தவற்றைத் தொகுத்துக் காண்போமா? தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று தூது இலக்கியம். பாட்டியல் நூல்கள் தூது இலக்கியத்தின் இலக்கணம் கூறுகின்றன. தமிழ் மொழியில் தோன்றிய முதல் தூது நூல் நெஞ்சு விடு தூது ஆகும். ஆனாலும், தூது இலக்கியத்தின் கூறுகள் தொல்காப்பியத்திலும், பிற இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. அழகர் கிள்ளை விடு தூது நூலின் துணையுடன் தூது இலக்கியத்தின் அமைப்பையும் பாடுபொருளையும் அறிய முடிகின்றது. தூது நூல்களில் தூது விடு பொருளின் பெருமைகள் பல
கூறப்படுகின்றன. தூது பெறும் தலைவனின் சிறப்புகள்
சுவைபடக் கூறப்படுகின்றன. தூது அனுப்பும் தலைவியின் நிலை
காட்டப்படுகின்றது. தூது அனுப்புவோர் தூதுப் பொருளிடம்
தூது
வேண்டும் செய்தி இடம் பெறுகின்றது. தூது நூலின்
இலக்கிய
நயம் வெளிப்படுகின்றது.
|