நண்பர்களே! இதுவரை படித்தவற்றைத் தொகுத்துக் காண்போமா? தமிழில் உள்ள சிற்றிலக்கிய வகைகளுள் குறிப்பிடத்தக்க ஓர் இலக்கிய வகையாகக் குறவஞ்சி இலக்கியம் உள்ளது. குறவஞ்சி என்ற இலக்கியம் இப்பெயர் பெற்றதன் காரணம் தெரிய வருகிறது. குறவஞ்சி இலக்கியம் தோன்றுவதற்கான கருத்துகளை அறிய முடிகின்றது. குறவஞ்சி இலக்கிய வகையின் அமைப்பையும் பாடு பொருளையும் அறிய முடிகிறது. குறவஞ்சி இலக்கிய வகையில் இலக்கிய நயம், கற்பனைத் திறன், ஓசை நயம் முதலியனவற்றை உணர முடிகிறது.
|