6.5 தொகுப்புரை நண்பர்களே! கோவை இலக்கியம் பற்றி இதுவரையிலும் பார்த்தவற்றைத் தொகுத்துக் காண்போமா? கோவை இலக்கியத்தில் அகத்துறைகள் பல நிரல்(வரிசை) படச் சேர்க்கப்பட்டுள்ளன. கோவை இலக்கியத்தின் துறைகள் சிலவற்றைப் பற்றி அறிய முடிகிறது. திருக்கோவையார் என்ற நூலில் பாட்டுடைத் தலைவன் ஆகிய சிவபெருமானின் பெருமைகளை அறிய முடிகின்றது. பண்டைத் தமிழர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றி உணர முடிகிறது. கோவை இலக்கிய வகையின் இலக்கியச் சிறப்புகளை அறிய முடிகிறது.
|