தன்மதிப்பீடு : விடைகள் - II

5.

உரிச்சொற்கள் எத்தனை வகைப்படும்?

உரிச்சொற்கள் இரண்டு வகைப்படும்.

1.

ஒரு குணம் தழுவிய உரிச்சொல். இது ஒரு பொருள் தரும் பல சொற்களைக் குறிக்கும்.

சால, உறு, தவ, நனி, கூர், கழி ஆகிய சொற்கள் மிகுதி என்ற ஒரே பொருள் தரும்.

2.

பல குணம் தழுவிய உரிச்சொல். இது பல பொருள்களைத் தரும் ஒரு சொல்லைக் குறிக்கும்.

கடி என்ற சொல் காப்பு, கூர்மை, மிகுதி, விரைவு, அச்சம், சிறப்பு முதலிய பல பொருள்களைத் தரும்.

 

முன்