1.6 தொகுப்புரை

காலந்தோறும் இலக்கியத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கேற்ப இலக்கணத்திலும் மாற்றங்கள் தேவைப்பட்டுள்ளன. எனவே பல புதிய இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன. அந்த இலக்கண நூல்கள் பற்றிய அறிமுகம் இப்பாடத்தில் தரப்பட்டுள்ளது. மேலும் தொல்காப்பியம், நன்னூல் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

தமிழ் இலக்கணம்,

1. எழுத்து இலக்கணம்
2. சொல் இலக்கணம்
3. பொருள் இலக்கணம்
4. அணி இலக்கணம்
5. யாப்பு இலக்கணம்

என்று ஐந்து பிரிவாக உள்ளது. எழுத்து இலக்கண அறிமுகத்தில் எழுத்துகளின் வடிவங்கள், வகைகள் முதலியவையும் இடம் பெற்றுள்ளன. பத இலக்கணம், சந்தி இலக்கணம் முதலியவையும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

சொல் இலக்கண அறிமுகத்தில் திணை, பால், எண், இடம் முதலியவையும் இலக்கிய வகைச் சொற்களும் இலக்கண வகைச் சொற்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

செய்யுளில் வரும் சொற்கள் எத்தனை வகைப்படும்?

விடை

2.

திணை எத்தனை வகைப்படும்?

விடை

3.

பெயர்ச் சொல்லின் வகைகள் யாவை?

விடை

4.

எச்சவினை என்றால் என்ன?

விடை

5.

உரிச்சொற்கள் எத்தனை வகைப்படும்?

விடை