தன் மதிப்பீடு : விடைகள் - II
1. | பாலைத்திணைப் பாடலில் செழிப்பு, குளிர்ச்சி ஆகியவற்றைக் காட்டும் பெருங்கடுங்கோவின் நோக்கம் என்ன? |
உடன்போக்கில் செல்லும் காதலர்கள், யாரும் எதுவும் தடைசெய்ய முடியாத ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலைக்குச் சென்றுவிட்டனர். அளவற்ற மகிழ்ச்சி பெருகுகிறது. அவர்களின் அகச்சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் கவிஞர் புறச்சூழலில் இயற்கையின் செழிப்பையும் குளிர்ச்சியையும் இனிமைகளையும் காட்டுகிறார். |