தன் மதிப்பீடு : விடைகள் - II
2. | தலைவனிடம் தலைவியை ஒப்படைக்கும் தோழி கூற்றில் புலப்படும் உணர்வை எடுத்துக் காட்டுக. |
தலைவியின் எதிர்காலம் பற்றிய எண்ணத்தில் ஆழ்ந்த தோழி அவளது முதுமைக் கோலத்தைத் தலைவனின் கற்பனைக் கண்ணில் காட்டி, அந்நிலையிலும் அவளைக் கைவிடாமல் அன்போடு நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறாள். இங்குத் தலைவன் மீது தலைவிக்குள்ள காதலாகிய அக அழகு, புற அழகைவிட மேலானது என்பதைத் தோழியின் பேச்சு புலப்படுத்துகிறது. |