தன் மதிப்பீடு : விடைகள் - II
2. | அடுத்த வீட்டுப் பெண்ணின் நற்சொல்லுக்குக் கிடங்கில் என்ற ஊர் உவமையாகிறது. உவமை பொருந்துமா? விளக்குக. |
சங்க இலக்கியத்தில் சில உவமைகள் நேரடியாகப் பொருத்தம் காணமுடியாதவையாக இருக்கும். தொண்டி போன்ற அழகுடையவள், இருப்பை போன்ற அழகுடையவள் என்பன போன்ற உவமைகள் நேரடிப் பொருத்தம் உடையவை அல்ல. உருவம், நிறம், தோற்றம் போன்ற ஒப்புமைகளை இங்குக் காணமுடியாது. அந்த நகரங்கள் கவிஞன் மனத்தில் உருவாக்கிய அழகுணர்ச்சியும் தலைவியின் தோற்றம் உருவாக்கும் அழகுணர்ச்சியும் ஒத்திருக்கின்றன எனப் புரிந்து கொள்ள வேண்டும். அது போலத்தான் இங்குக் ‘கிடங்கில்’ எனும் ஊர் ஏற்படுத்தும் இனிமை, பக்கத்து வீட்டுப் பெண் பேச்சின் இனிமைக்கு உவமையாகிறது. இந்த ஒப்புமையைப் புரிந்து கொள்ளக் கவிஞரின் உள்ளப் பாங்கோடு நாம் இணைய வேண்டும். இணைந்தால் உவமையின் பொருத்தம் புரியும். |