2.4 தொகுப்புரை

இப்பாடல்களில் காதல் உணர்வின் பல்வேறு தோற்றங்களைக் கண்டீர்கள்; தலைவி, தோழி, தலைவன், பாகன் போன்ற பாத்திரங்களின் பேச்சுகளில் சொல்லைத்தாண்டி விரியும் மனக்குறிப்புகளை உணர்ந்தீர்கள். அன்புப் பெருக்கின் முன்னிலையில் காட்டுக்கோழி தோழனாகவும் புன்னைமரம் தங்கையாகவும் மாறிவிடும் உலக ஒருமைப்பாட்டைக் கவிஞர்கள் உங்களுக்குக் காட்டினார்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. புன்னை தலைவியின் தங்கையாக - உயர்திணைப் பொருளாகக் காட்டப்படுவதன் நோக்கம் என்ன? [விடை]
2. அடுத்த வீட்டுப் பெண்ணின் நற்சொல்லுக்குக் கிடங்கில் என்ற ஊர் உவமையாகிறது. உவமை பொருந்துமா? விளக்குக. [விடை]
3. சேகம் பூதனார் அருளில்மாலை என மாலையை வருணிப்பது ஏன்? [விடை]
4. உழவனின் தோற்றத்தை வருணிக்கும் தூங்கலோரியாரின் கவித்துவச் சிறப்பை எடுத்துக் காட்டுக. [விடை]