தன் மதிப்பீடு : விடைகள் - II
4. | உழவனின் தோற்றத்தை வருணிக்கும் தூங்கலோரியாரின் கவித்துவச் சிறப்பை எடுத்துக் காட்டுக. |
நடவு வேலைக்காக விடியலில் புறப்படும் உழவன் பெரிய வரால் மீன் துண்டுகள் கிடக்கின்ற குழம்புடன் அரிசிச் சோற்றை மயக்கமேற உண்கிறான். அவனுடைய மனத்தின் ஆசையையும், நாவின் சுவை உணர்ச்சியையும் அப்படியே அவனது கைக்கு மாற்றுகிறார் புலவர். கவர்படுகையை கழும மாந்தி - ஆசை நிரம்பிய கை என்கிறார். கையே மனத்தையும் நாவையும் காட்டுகிறது. |