தன் மதிப்பீடு : விடைகள் - I

1. விழிக்கண்பேதை என்ற வருணையில் உங்களுக்கு ஏற்படும் அழகுணர்ச்சியைத் தெரிவிக்க முடியுமா?

இயல்பாகவே மானின் கண்கள் மருட்சியைக் காட்டுபவை. இங்கே மான்குட்டியின் கண்களைக் காட்டுகிறார் கவிஞர். மருட்சியோடு, ஒன்றுமறியாத அப்பாவித் தன்மையும் கலந்த அக்கண்களைப் பேதைமையுடைய கண்கள் என்கிறார். மான்குட்டியின் இயக்கங்கள் அனைத்திலும் தெரியும் பேதைமை முழுதும் திரண்டு அதன் கண்ணில் தெரிவதாகப் புலவர் காட்டுவதை நன்கு அனுபவம் கொள்ள முடிகிறது. இந்தத் தொடர் மான்குட்டியை எப்படிப் பார்க்க வேண்டும் எனக் கவிதைச் சுவைஞனுக்கு வழிகாட்டுகிறது.

முன்