தன் மதிப்பீடு : விடைகள் - I
4. | செறிப்பறிவுறுத்தல், வரைவுகடாதல் எனும் துறைகளை விளக்குக. |
செறிப்பறிவுறுத்தல் தலைவி வீட்டைவிட்டு வெளியே போகமுடியாதபடி அவள் தாயினால் தடுத்து வைக்கப்படுவது இற்செறித்தல் ஆகும். இந்த உண்மையைத் தலைவனுக்குத் தெரிவித்துத் தலைவியை விரைந்து திருமணம் செய்து கொள்ளுமாறு மறைமுகமாகத் தூண்டுவது செறிப்பறிவுறுத்தல் ஆகும். வரைவுகடாதல் வரைவு = திருமணம், கடாதல் = வேண்டுதல், திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டுதல். |