தன் மதிப்பீடு : விடைகள் - II

2. ‘ஓர்யான் மன்ற துஞ்சாதேனே’ - இந்த அடியில் வெளிப்படும் உணர்ச்சிப் பெருக்கை எடுத்துக் காட்டுக.

பிரிவின் வேதனையால் உறக்கமற்றுத் தவிக்கும் தலைவி, தன் உயிர்த்தோழியும் உறங்குவது கண்டு புலம்புகிறாள். முழு உலகத்திலிருந்தும் தான் அந்நியமாகிப் போனதாக உணர்கிறாள். தன் துயரில் பங்கு கொள்ளவோ ஆறுதல் சொல்லவோ யாருமில்லை என்ற ஒன்றே அவள் பிரிவுத் துன்பத்தைப் பெரிதாக்கி விடுகிறது. இவ்வடி இதனை உணர்த்துகிறது.

முன்