4.4 தொகுப்புரை

தலைவன், தலைவி, தோழி, காதற்பரத்தை ஆகியோருடைய கூற்றுகளாய் அமைந்த இப்பாடல்களில் காதல் பிணைப்பின் இன்பம், பிரிவின் துன்பம் - ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் நம்பிக்கை, அடிமனத்தில் தோன்றும் ஐயம் - போன்ற முரண்பட்ட உணர்வுகள் உண்மை அன்பு என்னும் ஒரே புள்ளியில் வந்து குவிவதைப் பார்த்தோம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
கபிலரின் பாடலில் வேர்ப்பலா - கிளைப்பலா ஆகியவற்றைக் கொண்டு தோழி உணர்த்துவது யாது?
[விடை]
2.
‘ஓர்யான் மன்ற துஞ்சாதேனே’ - இந்த அடியில் வெளிப்படும் உணர்ச்சிப் பெருக்கை எடுத்துக் காட்டுக.
[விடை]
3.
நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு எனும் உவமையின் பொருத்தத்தை விளக்குக.
[விடை]
4.
அகவன் மகளே எனத்தொடங்கும் பாடலின் வடிவச் சிறப்பைப் புலப்படுத்துக.
[விடை]