தன் மதிப்பீடு : விடைகள் - II
3. | நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு எனும் உவமையின் பொருத்தத்தை விளக்குக. |
வெள்ளிவீதியார் பாடலின் தலைவி, தலைவனைப் பிரிந்திருக்கிறாள். தன் அழகு தனக்கும் பயனின்றித் தலைவனுக்கும் பயனின்றி வீணாகப் பசலைநோய்க்கு இரையாகிறது எனக் காண்கிறாள். இதனை உணர்த்த அவள் பசுவின் பால் கன்றுக்கும் பயன்படாமல் கலத்திலும் விழாமல் மண்ணில் சொரிந்து வீணாவது போல் என உவமை கூறுகிறாள். தலைவியின் அழகுக்கு, மாசுமறுவற்ற பயனுள்ள பசுவின் பால் சிறப்பான உவமை. அழகு வீணாவதைக் காட்டப் பால் மண்ணில் சிந்திப் போவது என்பதைவிடச் சிறந்த உவமை இருக்க முடியாது. |