தன் மதிப்பீடு : விடைகள் - II
4. | அகவன் மகளே எனத் தொடங்கும் பாடலின் வடிவச் சிறப்பைப் புலப்படுத்துக. |
குறி கூறும் கட்டுவிச்சி பாடும் பாடலைத் தோழி இடைமறித்துத் தலைவனின் மலையையே திரும்பத் திரும்பப் பாடு என்று கூறுவது தான் இப்பாடல். இதன் மூலம் தலைவியின் களவுக்காதலைச் செவிலிக்குக் குறிப்பாகத் தெரிவிப்பது அவள் நோக்கம். தொடர்ந்து வேறுபாடலுக்குப் போகவிடாமல் கட்டுவிச்சியைத் தடுத்துத் தலைவன் மலையையே திரும்பப் பாடு என வற்புறுத்தும் பாடலில் தோழியின் அவசரம், ஆர்வம், வேகம் ஆகியவற்றைக் காட்டும் முறையில் அகவன் மகளே எனும் தொடரும் பாடுக எனும் சொல்லும் திரும்பத் திரும்ப வருகின்றன. பாடலின் வடிவமே பாடலின் உணர்ச்சியை நன்கு தெளிவுபடுத்தி விடுகிறது. அகவன் மகளே அகவன் மகளே |