தன் மதிப்பீடு : விடைகள் - I

1. தலைவியின் சார்பாகத் தலைவனிடம் தூது செல்வோர் அவளது பசலை நோயை அவனுக்கு எவ்வாறு புலப்படுத்த வேண்டும் எனத் தலைவி விரும்புகிறாள்?

தலைவியின் வீட்டுத் தோட்டத்தில் மழைநீர் வடிகின்ற இடத்தில் மலர்ந்துள்ள பீர்க்கம் பூவைக் கொண்டு போய்த் தலைவனிடம் காட்டித் ‘தலைவி இந்த மலரின் நிறத்தை அடைந்திருக்கிறாள்’ எனச் சொல்ல வேண்டும் என்று தலைவி விரும்புகிறாள்.

முன்