3.9 தொகுப்புரை

ஒருவனுடைய புகழ், வலிமை, கொடை, அன்பு ஆகிய பண்புகளைக் கூறும் பாடாண்திணையின் கூறுகளை இப்பகுதியில் பார்த்தோம். இதில் பரிசில் வேண்டுதல், அரசனை வாழ்த்துதல், கொடைச்சிறப்பைக் கூறுதல், அரசனுக்கு நல்லனவற்றை அறிவுறுத்துதல், போற்றுதல் என்பவற்றோடு கடவுளர் பற்றிய செய்திகளையும் ஊரவர் பற்றிய செய்திகளையும் அறிந்துகொண்டோம். கடவுளை வாழ்த்துதலும் காதல் பற்றிய செய்திகளையும் பாடாண் திணையுள் அடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
ஆற்றுப்படை சார்ந்த துறைகள் எவை?
2.
வாயுறை வாழ்த்து என்பது யாது?
3.
மண்ணுமங்கலம் என்றால் என்ன?
4.

கடவுளை வணங்குதலாக உள்ள துறைகள் எவை?

5.
கைக்கிளைத் துறையின் கொளு கூறும் கருத்து யாது?