5.4 தொகுப்புரை

    இப்பாடத்தின் கீழ் பழந்தமிழ் இலக்கணத்தில் எத்தனை வகையான பாகுபாடுகள் காணப்பட்டன என்பது பற்றி அறிந்தீர்கள். அதன் பின்னர் இக்கால எழுத்துத்தமிழில் எவ்வாறான பாகுபாடுகள் அமைந்துள்ளன என்பது பற்றிப் படித்தீர்கள். சொல்லெழுத்து (spelling), புணர்ச்சி (sandhi), கால இடைநிலை (tense malker), துணைவினை (auxiliary verb) போன்ற இலக்கணக் கூறுகள் எவ்வாறு எல்லாம் மாறுபட்டு இக்கால எழுத்துத் தமிழில் வழங்கி வருகின்றன என்றும் படித்தீர்கள்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
பழங்காலத் தமிழில் இருந்த காலங்கள் எத்தனை? அவை யாவை?
2.
இக்காலத் தமிழில் துணைவினை எவ்வாறான மாற்றங்களைக் கொண்டுள்ளது?
3.
‘இரு’ என்ற துணைவினை என்னென்ன பொருளில் இக்கால எழுத்துத் தமிழில் வருகிறது?
4.
எத்தனை வகையான வேற்றுமைகள் இக்கால எழுத்துத்தமிழில் வழக்கில் உள்ளன?
5.
சொல்லுருபுகள் பழங்காலத் தமிழில் இருந்தனவா? சான்று தருக.